கலைஞர் நூற்றாண்டு விழா- பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்த ஆட்சியர் தங்கவேல்

கரூர் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் பிப்ரவரி 14 ல் நடைபெற்ற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது பிரிவினை சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு கபடி போட்டி, கால்பந்து போட்டி மற்றும் கையுந்து பந்து போட்டிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் பிரிவுகளில் நடைபெற்றது. மேலும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வினாடிவினா, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியர் மற்றும் பொது பிரிவினருக்கு ,கரூர் தாந்தோணி அரசு கலைக்கல்லூரியில், மாவட்ட ஆட்சியர் தங்கவேல், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, ஆகியோர் முன்னிலையில் பரிசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் ஆட்சியர் தங்கவேல்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திருச்சிராப்பள்ளி மண்டல இணை இயக்குனர் முனைவர்.குணசேகரன்,முதன்மை கல்வி அலுவலர் சுமதி, அரசு கலைக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர், சமுக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முனைவர். உமாசங்கர், விளையாட்டு மைதான பயிற்சியாளர் மெய்யநாதமூர்த்தி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
