கிருபா கோபேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் கோமல் கிருபாகோபேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கோமல் ஊரில் பழமை வாய்ந்த கிருபா கூபேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த ஆலயம் பக்தர்கள் நிதி உதவியுடன் சீரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது இதனை முன்னிட்டு நான்கு கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன யாக சாலை பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மேல தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கலச அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags

Next Story