சிபிஎஸ்சி தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு

சிபிஎஸ்சி தேர்வில் மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பாராட்டு

மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பாராட்டினர்.


மயிலாடுதுறையில் சிபிஎஸ்இ ப்ளஸ் டூ பொதுத் தேர்வில் முதலிடம் பிடித்த மாணவருக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து பாராட்டினர்.
நாடு முழுவதும் கடந்த 13 ஆம் தேதி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகின. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மொத்தம் ஒன்பது சிபிஎஸ்சி பள்ளிகள் உள்ளன. இதில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மயிலாடுதுறையில் உள்ள எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இப்பள்ளியில் பயிலும் மாணவர் குருநாதன் 492 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் இப்பள்ளி மாணவிகள் ரேஷ்மி 474 மதிப்பெண்களும், விஸ்வஜா 471 மதிப்பெண்களும் எடுத்து பள்ளியில் இரண்டாம் இடமும், மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர். மேலும் இந்த மாணவர்கள் அனைவரும் கோடை விடுமுறைக்காக வெளியூர் சென்ற நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மாலை அணிவித்தார். அதனைத் தொடர்ந்து மாணவர்களை ஆசிரியர்கள் ரோஜா பூ மலர் தூவி உற்சாகமாக பள்ளிக்குள்ளே அழைத்து சென்று ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். பெற்றோர்கள் மாணவர்களுக்கும் பள்ளி நிர்வாகி சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களும், பெற்றோர்களும்‌ நெகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story