தமிழ் மொழியில் சிறந்து விளங்கியவர்களுக்கு பாராட்டு.

கரூர் பரணி பார்க் பள்ளியில், தமிழ் மொழியில் சிறந்து விளங்கி விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.


கரூரை அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் பரணி பார்க் கல்வி குழுமத்தில், தமிழ் மொழியில் தலைசிறந்த ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ரூ.36,000/- வீதம் பரிசுத்தொகை பெற்றவருக்கு பாராட்டு விழா, பள்ளி வளாகத்தில், பள்ளியின் தாளாளர் மோகனரங்கன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசால் மாநில அளவில் நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கியத் திறனறிதல் தேர்வு-2022ல் (46 பேர்), 2023ல் (103 பேர்) என வெற்றி பெற்ற மொத்தம் 149 சாதனை மாணவர்களுக்கும் மிகச் சிறப்பாக பயிற்சியளித்து, கரூருக்கு மாநில அளவில் தொடர்ந்து பெருமை சேர்க்கும் பரணி பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்களுக்கும் பாராட்டு விழா இன்று மதியம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்களின் மிகச்சிறப்பான பயிற்சியில் 149 வெற்றியாளர்களும் தமிழக அரசிடம் இருந்து பெறும் மொத்த ஊக்கத்தொகை ரூ. 53,64,000/-ஆகும். அன்னைத் தமிழுக்கும், கரூருக்கும் தன்னலமற்ற தம் கடும் உழைப்பால் தொடர்ந்து பெருமை சேர்த்தவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் பள்ளியின் தாளாளர் மோகனரங்கன். இந்த நிகழ்ச்சியில், பரணி பார்க் குழும செயலாளர் பத்மாவதி மோகனரங்கன், பள்ளியின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன், பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story