குத்தாலம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் குளம் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகார்

குத்தாலம் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் குளம் ஆக்கிரமிப்பு: மாவட்ட ஆட்சியரிடம் புகார்

கோவில் நிலம் ஆக்கிரமிப்பு

குத்தாலத்தில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய திருக்குளம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மீண்டும் தொடராமல் இருக்க கோரிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயில் திருக்குளம் ஒன்றரை ஏக்கரில் அமைந்துள்ளது. இந்த திருக்குளம் பல்வேறு நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கடைகள் கட்டப்பட்டு வருகிறது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, பக்தர்கள் ,மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தலின்படி ,தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், குளத்தின் பரப்பளவு எல்லையை அளந்து எல்லை, கல், அமைத்துள்ளனர். தொடர்ந்து மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில் ,

ஆக்கிரமிப்பாளர்கள் குளத்தில் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளில்,மீண்டும் , கடை அமைப்பதற்கு கட்டிடம் கட்டி வருவதாகவும் ,உடனடியாக தடுத்து நிறுத்தி கட்டிடம் கட்டும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து , திருக்குளத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை கேட்டுக் கொண்டுள்ளனர். ஒன்றை ஏக்கர் பரப்பளவு உள்ள குளம் ,ஆக்கிரமிப்பாளர்களால் முக்கால் ஏக்கராக சுருங்கிவிட்டதாக கூறப்படுகிறது .

Tags

Next Story