ஊரணி காளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

ஊரணி காளியம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம், தாந்தோணிமலை, அருள்மிகு ஸ்ரீ ஊரணி காளியம்மன், அருள்மிகு ஸ்ரீ துர்க்கை அம்மன், அருள்மிகு ஆதி மாரியம்மன் கோவிலில், நற்பணி மன்றத்தின் சார்பில் 13 ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜை கோவில் வளாகத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. தாந்தோணி மலை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் இந்த பூஜையில் பங்கேற்று மனம் உருகி பிரார்த்தனை செய்தனர். குத்துவிளக்கு பூஜைக்கான ஏற்பாட்டினை கரூர் மாநகராட்சி 44 வது வார்டு கவுன்சிலர் மோகன்ராஜ், 42 வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கினர்.

Tags

Next Story