கரூரில் அமைச்சர் இல்லாததால் வளர்ச்சி திட்டப்பணிகள் பின்தங்கி உள்ளது-வி.சி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் பேட்டி !

கரூரில் அமைச்சர் இல்லாததால் வளர்ச்சி திட்டப்பணிகள் பின்தங்கி உள்ளது-வி.சி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் பேட்டி !

பேட்டி

கரூரில் அமைச்சர் இல்லாததால் வளர்ச்சி திட்டப்பணிகள் பின்தங்கி உள்ளது-வி.சி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் பேட்டி அளித்தார்.

கரூரில் அமைச்சர் இல்லாததால் வளர்ச்சி திட்டப்பணிகள் பின்தங்கி உள்ளது-வி.சி.க. கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் பேட்டி கரூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக பழைய பேருந்து நிலையத்தை போக்குவரத்துக்கு ஏதுவாக இடித்துவிட்டு, புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்றது.

புதிய பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் பணிகள் நிறுத்தப்பட்டது. பணிகள் நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் தொடரப்படாமல் உள்ளது. அதேசமயம் இடிக்கப்பட்ட பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல், கடந்த இரண்டு வருடங்களாக கரூரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகளும் பொது மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

அமைச்சர் இல்லாததனால் கரூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பின் தங்கி உள்ளது. எனவே, தற்போது செயல்படும் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். புதிய பேருந்து நிலையத்தை உடனே கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தவறினால், கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.

Tags

Next Story