லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப  கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் லேப்ராஸ்கோப் மூலம் குடும்ப அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கலந்துரையாடினார்

மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனையில் லாப்ராஸ்கோப் நுண்துளை கருவி மூலம் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்துகொண்ட தாய்மார்களுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி , நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் .ஏ.பி.மகாபாரதி சிறப்புரையாற்றுகையில் அளவான குடும்பம் அமைப்பதில் தாய்மார்களின் பங்கு மிகவும் முக்கியமாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெறும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளில் 97% மேல் தாய்மார்களே மேற்கொள்கின்றனர்.

பெண்களுக்கான குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முறைகளில் மிகவும் எளிய சிகிச்சை முறை லேப்ராஸ்கோப் எனும் நுண்துளை கருவி மூலம் செய்யப்படும் சிகிச்சை ஆகும். மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும், சீர்காழி அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமையும் லேப்ராஸ்கோப் மூலம் பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்கள் மூலம் எளிய முறையில் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

ஒன்று அல்லது இரண்டு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்ற தாய்மார்களும் இச்சிகிச்சையை மேற்கொள்ளலாம். அதிக இரத்த இழப்பு ஏற்படாது. அதிக வலி ஏற்படாது. சிகிச்சை முடிந்து மறுநாளே வீடு திரும்பலாம். கடின வேலைகளையும் முன்பு போலவே செய்ய முடியும். இச்சிகிச்சையை செய்து கொள்ளும் தாய்மார்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூபாய் 600 வழங்கப்படும். மேலும் ஊக்குவிப்பாளருக்கு ரூபாய் 150 வழங்கப்படும். மேலும், இதய நோய், இரத்த சோகை, உயர் இரத்த அழுத்தம். நீரழிவு நோய், உடல் பருமன், காசநோய் நரம்பியல் சம்பந்தமான நோய்,

அடிக்கடி கருகலைப்பு, அதிக குழந்தைகள் போன்ற பல்வேறு காரணங்களிலால் குடும்பநல அறுவை மேற்கொள்ள இயலாத தாய்மார்களின் கணவர்மார்களுக்கு ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை செய்து கொள்வதால் அரசு வழங்கும் ஊக்கத் தொகை அல்லாது மாவட்ட நிர்வாகம் சார்பில் கூடுதல் ஊக்க தொகை ரூ.3900 வழங்கப்பட்டு வருகிறது.

உடன் மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் (குடும்ப நலம்)ஜோஸ்பின் அமுதா , சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி , மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமை மருத்துவமனை முதன்மை மருத்துவர் செந்தில்குமரன் உள்ளனர்.

Tags

Next Story