வழக்கறிஞர் சுதாராமகிருஷ்ணன் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி

வழக்கறிஞர் சுதாராமகிருஷ்ணன் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸுக்கு இந்திய கூட்டணியால் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் காங்கிரஸ் வேட்பாளருக்கான தேர்வில் பல்வேறு சிக்கல் இருந்துவந்து. ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பர் பிரவின்சக்கரவர்த்தி நிறுத்தப்படுவதாக வந்த செய்தி இறுதியில் மாற்றப்பட்டது. நேற்று இரவு தமிழக மகிளா காங்கிரஸ் தலைவி வழக்கறிஞர் சுதாராமகிருஷ்ணனை இந்திய தேசி காங்கிரஸ் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அறிவித்தது. இவர் சென்னை கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றவர் இன்று மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு மேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

Tags

Next Story