வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

கட்டாய இ ஃபைலிங் முறையை நிறுத்தி வைக்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கட்டாய இ ஃபைலிங் முறையை நிறுத்தி வைக்க கோரி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு. தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்கறிஞர்கள் தங்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை இ ஃபைலிங் செய்ய வேண்டும் என்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதேசமயம், பெரும்பாலான நீதிமன்றங்களில் ஈ-பைலின் செய்வதற்கான கட்டமைப்புகள் இன்னும் நிறுவப்படாமல் உள்ளது. இயல்பாக வழக்கறிஞர் ஒரு மனுவை தாக்கீடு செய்ய வேண்டுமானால் ஒரு நாளில் செய்துவிடலாம். அதைவிட விரைவாக செய்யலாம் என்ற கருத்தியல் காரணமாக இ- பைலிங் என்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால்,அதற்கான கட்டமைப்புகள் முறையாக அமைக்கப்படாததால் இ-பைலிங் செய்வதற்கு இரண்டு நாட்கள் முதல் 5 நாட்கள் வரை ஆவதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் இ-பைலிங் முறையை நடைமுறைப்படுத்த தேவையான கட்டமைப்பு வசதிகளை நிறுவும் வரை இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கூறி, இன்று கரூர் மாவட்டத்தில், கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க மாநில தலைவர் மாரப்பன் தலைமையிலும், குளித்தலை, அரவக்குறிச்சி, மாயனூர் நீதிமன்றங்களில் பார் அசோசியேஷன் தலைவர் சாகுல் அமீது தலைமையிலும் இன்று ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் வழக்காடிகளுக்கு இன்று பெரும் சிரமம் ஏற்பட்டது.

Tags

Next Story