மின்னணுமுறை மனுத் தாக்குதலைக் கைவிடக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்....
போராட்டம்
மயிலாடுதுறை மாவட்ட வழக்கறிஞர்கள், கீழ்க்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மாயூரம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜெகத்ராஜ் கூறுகையில், நீதிமன்றங்களில் வழக்கு விபரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. பல்வேறு ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக கூறும் பழைய முறையிலேயே வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும்.
நீதிமன்றம் செய்யக்கூடிய பணிகளை வழக்கறிஞர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் திணிப்பது கூடாது என்றும் மின்னணு மனு தாக்கல் முறையில் அதிகபட்ச அளவில் குளறுபடிகள் ஏற்படும் என்பதால் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல்செய்வதில் மிகவும் தேக்கம் ஏற்படும் என்பதால் இம்முறையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று முதல் நீதிமன்ற பணிகளை புறக்கணித்துள்ளனர்.
சனிக்கிழமை வரை நீதிமன்றத்தை புறக்கணித்துள்ளனர், 8 ஆம் தேதி வழக்கறிஞர்கள் பணிக்கு திரும்புகின்றனர். இந்த போராட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் தரங்கம்பாடி நீதிமன்ற வழக்கறிஞர்கள் 300க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றார். இதன் காரணமாக மயிலாடுதுறையில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் மாவட்ட நீதிமன்றம், அமர்வு நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தரங்கம்பாடி நீதிமன்றம் மற்றும் சீர்காழி நீதிமன்றம் என 13 நீதிமன்றங்களிலும் வழக்குப்பணிகள் பாதிக்கப்பட்டன.