தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர்கள் நன்றி தெரிவிப்பு

தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர்கள் நன்றி தெரிவிப்பு

நன்றி தெரிவிப்பு 

பொள்ளாச்சி ஒருங்கிணைந்து நீதிமன்ற வளாக கட்டிட கூடுதல் பணிகளுக்கு 14 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கி தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டாடினர்.

பொள்ளாச்சி ஒருங்கிணைந்து நீதிமன்ற வளாக கட்டிட கூடுதல் பணிகளுக்கு 14 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கி தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து பொதுமக்களுக்கு வழக்கறிஞர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.. பொள்ளாச்சி: மார்ச்..15

பொள்ளாச்சி கோவை சாலையில் சி டி சி மேடு பகுதியில் 10 நீதிமன்றங்கள், 5 நீதிபதிகள் குடியிருப்புகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடம் கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு ரூபாய் 35 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் போதுமான நிதி இன்மை காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து பொதுமக்கள் வழக்கறிஞர்கள் தொடர்ந்து தமிழக அரசுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார் அப்போது வழக்கறிஞர்கள் மற்றும் திமுகவினர் முதல்வருக்கு கோரிக்கை வைத்ததை அடுத்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கட்டிடத்திற்கு கூடுதல் வசதிகளை மேம்படுத்த ரூபாய் 14 கோடியே 59 லட்சம் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார்.

முதல்வரின் இந்த அறிவிப்பால் வழக்கறிஞர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட நீதிமன்றங்கள் கட்டப்பட்டிருந்தாலும் மற்ற நீதிமன்றங்களுக்கு முன்மாதிரியாக பிரம்மாண்ட மர வேலைகள், குளிர்சாதன வசதி வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய இன்றியமையாத நீதிமன்றமாக செயல்பட கூடுதல் நிதி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு வழக்கறிஞர்கள் நன்றி தெரிவித்தனர்.

இதனிடையே பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் திமுக நிர்வாகிகள் சார்பில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு 14 கோடியே 59 ஒன்பது லட்சம் நிதி ஒதுக்கி தந்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Tags

Next Story