சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டிடம் கட்ட அடிக்கல்
அடிக்கல் நாட்டு விழா
தரங்கம்பாடி அருகே கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது
குத்தாலம் ஒன்றிய குழு தலைவர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் கலந்து கொண்டு தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார். இதில் ஒன்றிய செயலாளர் அப்துல் மாலிக், ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலித், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மணிகண்டன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
Next Story