போக்சோ குற்றவாளிக்கு கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை

போக்சோ குற்றவாளிக்கு கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை

கண்ணன்

மயிலாடுதுறை அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிக்கு கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்து நாகை முதன்மை சிறப்பு அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் கண்ணன் (வயது 53). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் 16 வயது சிறுமியை, பாலியல் பலாத்காரம் செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நாகை முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது.

இந்தநிலையில், இந்த வழக்கில் போக்சோ சட்டப்பிரிவுக்காக குற்றவாளி கண்ணனுக்கு ஆயுள் தண்டனையும், அபராத தொகை ரூ.20,000/- விதித்து, கட்டத் தவறினால் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் பிரிவு 506(ii) IPC-ன்படி 7 வருடம் கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் அபராத தொகை ரூ. 5,000/- விதித்தும், கட்டத்தவறினால் 6 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க தெரிவிக்கப்பட்டது.

Tags

Next Story