காளியம்மன் கோவில் அருகே மது விற்பனை
காளியம்மன் கோவில் அருகே சட்டவிரோதமாக மது விற்ற நபரை கைது செய்த போலீசார் 14 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சட்டவிரோத மது விற்பனை நடப்பதாக மதுவிலக்கு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி மே 4-ம் தேதி மதியம் 1:30 மணி அளவில், மன்மங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, அப்பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் அருகே மது விற்பனை நடப்பது கண்டு அறியப்பட்டது. இந்த சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட, மண்மங்கலம், புது காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனி மகன் ரவி வயது 57 என்பவரை கைது செய்து,அவர் விற்பனைக்கு வைத்திருந்த 14 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Next Story