மாரியம்மன் திருவிழா- கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நாளில் உள்ளூர் விடுமுறை

மாரியம்மன் திருவிழா- கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நாளில் உள்ளூர் விடுமுறை

கம்பம் நடும் விழாவிற்கு உள்ளூர் விடுமுறை 

கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் நடும் திருவிழாவிற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் வைகாசி மாத திருவிழா மே 12ஆம் தேதி கம்பம் நடும் விழாவுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று பூச்செரிதல் விழா இரவு நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று, மே 29ஆம் தேதி கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கரூர் மாவட்டம் மட்டுமன்றி, அண்டை மாவட்டங்களில் இருக்கும் பொதுமக்கள், பக்தர்கள் இந்த நிகழ்ச்சியில் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள். பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு, கரூர் மாவட்டத்தில் மே 29ஆம் தேதி ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் சற்று முன் அறிவித்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக, ஜூன் 8-ம் தேதி சனிக்கிழமை அன்று, அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது எனவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story