ஆன்லைன் டாக்சியால் வாழ்வாதாரம் இழந்து நிற்கும் உள்ளூர் டாக்ஸி ஓட்டுனர்கள்
மனு அளிப்பு
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1500.க்கும் மேற்பட்ட டாக்ஸி ஓட்டுனர்கள் வடைகை கார்களை கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம் இவர்களையும் விட்டு வைக்கவில்லை கோவையில் இருந்து பயணிகளை ஏற்றி வரும் சில ஆன்லைன் டாக்சிகள் பொள்ளாச்சியில் இருந்து மீண்டும் பயணிகளை ஆன்லைன் மூலம் பதிவு செய்து அழைத்து செல்கின்றனர்.
இதனால் பொள்ளாச்சி பகுதியில் உள்ள டாக்ஸி ஓட்டுனர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக பொள்ளாச்சி வாடகை டாக்ஸி ஓட்டுனர்கள் பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் நடவடிக்கை எடுக்க கோரி இன்று மனு அளித்தனர். டாக்ஸி ஓட்டுனர்கள் கூறுகையில்,
கோவை, திருப்பூர்., உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து வரும் ஆன்லைன் டாக்சிகள் பொள்ளாச்சியில் இருந்து பயணிகளை ஏற்றி செல்வதால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காடுவதாகவும் எங்களுகென கிடைக்கும் ஓரிரு வாடைகளும் கிடைப்பதில்லை.
இதனால் வாகன பராமரிப்பு, வாகன வரி, காப்பீடு உள்ளிட்டவை கூட கட்ட முடியாமல் தடுமாறி வருவதாகவும். எங்களில் பலபேர் மாற்று தொழிலுக்கு சென்று வருவதாகவும் இந்த நிலை நீடிக்குமானல் நாங்கள் சாலையில் இறங்கி போராடவும் தயாராக உள்ளோம் என வாடகை டாக்ஸி ஓட்டுனர்கள் தெரிவித்தனர்m