மக்களவை தேர்தல் : 24 மணி நேரமும் கேமராவுடன் கண்காணிப்பு வாகனங்கள்

மக்களவை தேர்தல் : 24 மணி நேரமும் கேமராவுடன் கண்காணிப்பு வாகனங்கள்
X

கண்காணிப்பு வாகனங்கள் 

தேர்தல் கண்காணிப்பிற்காக 3 பறக்கும் படை வாகனங்களை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாராளுமன்ற தேர்தல்-2024 அறிவிப்பினையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறைபாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் பூம்புகார் சட்டப்பேரவை தொகுதிக்கான பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஜிபிஎஸ் கேமரா பொறுத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய வாகனங்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். 3 தேர்தல் பறக்கும்படை வாகனங்களை மாவட்ட ஆட்சியர்/மாவட்ட தேர்தல் அலுவலர் ஏ.பி.மகாபாரதி கொடியசைத்து தொடங்கி வைத்தார் உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) முத்துவடிவேல்,தனி வட்டாட்சியர் (தேர்தல்)விஜயராகவன் உடனிருந்தனர்.

Tags

Next Story