தொழிலில் நஷ்டம்: தொழிலதிபர் தற்கொலை
கரூர் ஆண்டாங் கோவில் கிழக்கு, வேலுச்சாமிபுரம் சக்தி நகர் இரண்டாவது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன் வயது 55 இவர் வேலுச்சாமி புரத்தில் ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வந்தார். இவரது நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதனால் கடந்த ஒரு மாதமாக விரக்தியுடன் இருந்த மதியழகன் நவம்பர் மூன்றாம் தேதி காலை 11 மணியளவில் எலி பேஸ் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதனை அறிந்த அவரது மகள் ஹரிதா வயது 23 என்பவர்,உடனடியாக தனது தந்தை மதியழகனை மீட்டு கோவையில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நவம்பர் நான்காம் தேதி உயிரிழந்தார். எனவே, இது குறித்து ஹரிதா கரூர் மாநகர காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையினர். மேலும், உயிரிழந்த மதியழகன் உடலை கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். கரூர் மாநகர காவல் துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக நவம்பர் நான்காம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர்.