வேலுச்சாமிபுரத்தில் லாட்டரி விற்பனை: இருவர் கைது
காவல் நிலையம்
வேலுச்சாமி புரத்தில் கள்ள லாட்டரி விற்பனை. இருவர் கைது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை நடப்பதாக காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது.
இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 26 ஆம் தேதி மதியம் 2:30 மணி அளவில் வேலுச்சாமிபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த இருவரை மடக்கிப் பிடித்தனர்.
இதில் வேலுச்சாமி புரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சுருளிராஜ் என்பவரும், நாமக்கல் மாவட்டம்,ராசிபுரம், வி.நகரை சேர்ந்த மெய்யழகன் மகன் கார்த்திக் வயது 26 என்பவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் 150 மதிப்புள்ள 5 லாட்டரி டிக்கெட் களையும், விற்பனை செய்து கையில் வைத்திருந்த ரூபாய் 1500-ஐயும் பறிமுதல் செய்தனர்.
மேலும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, பின்னர் அவர்களை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.