வெங்கமேடு அருகே லாட்டரி விற்பனை- ஒருவர் கைது
லாட்டரி சீட்டு
கரூர் மாவட்டம், வெங்கமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முருகன்-க்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஏப்ரல் 26 ஆம் தேதி மதியம் 12.30 மணி அளவில், வெங்கமேடு, புளியமரம் பஸ் ஸ்டாப் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, வெங்கமேடு, காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருணாச்சலம் மகன் சந்திரன் வயது 45 என்பவர், தடை செய்யப்பட்ட கள்ளல் லாட்டரி டிக்கெட் விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.. மேலும் ,அவர் விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் 900 மதிப்புள்ள 30 லாட்டரி டிக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
பிறகு சந்திரனை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் வெங்கமேடு காவல்துறையினர்.