ரோட்டில் கிடந்த ரூ. 1 லட்சம் பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த இளைஞர்

பொள்ளாச்சியில் ரோட்டில் கிடந்தரூ. 1 லட்சம் பணத்தை போலீசாரிடம் இளைஞர் ஒப்படைத்தார்.

பொள்ளாச்சி உடுமலை சாலையில் கீழே கிடந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு காவல்துறையினரும் அப்பகுதி மக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.. பொள்ளாச்சி சூழேஸ்வரன்பட்டி அருகே உள்ள அழகப்பா காலனி பகுதியைச் சேர்ந்தவர் சட்டநாதன் இவரது மகன் தாமோதரன் 18 வயது இவர் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள தேர்நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல் வேலைக்கு வந்த அவர் தனது சொந்த வேலையாக கடையிலிருந்து வெளியே சென்றுள்ளார்.. அப்போது தேர் நிலையம் அருகே 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் சாலையில் கிடைப்பதை கண்டுள்ளார்.. பின்னர் சாலையில் கிடந்த ஒரு லட்சம் ரூபாய் நோட்டுகளை எடுத்து அருகே இருந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் தாமோதரன் ஒப்படைத்துள்ளார்.

பின்பு போலீசார் அவரிடம் விசாரித்தபோது சாலையில் நடந்து வரும் பொழுது இந்த ரூபாய் நோட்டுகள் கீழே கிடந்ததாகவும் அதை தற்போது எடுத்து காவல்நிலத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.. ஆனால் தற்போது தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் தேர்தல் விதிமுறை மீறல்கள் கண்காணிக்கும் பணியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் பொள்ளாச்சி தேர்நிலையும் பகுதியில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதால் இந்த பணத்தை யாராவது கீழே வீசி சென்று உள்ளார்களா அல்லது எதிர்பாராத விதமாக தவற விட்டு சென்றார்களா என்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் கிடந்த ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர் தாமோதரனை போலீசாரும் மற்றும் பொதுமக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags

Next Story