மகா கணபதி கருப்பண்ணசாமி ஆலய கும்பாபிஷேக விழா
சிறப்பு பூஜையில் கலந்து கொண்டவர்கள்
மகா கணபதி கருப்பண்ணசாமி ஆலய கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், கோயம்பள்ளி கிராமம், செல்லிபாளையம் பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நகரில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு மகா கணபதி மற்றும் அருள்மிகு கருப்பண்ணசாமி ஆலயம் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு , காலை முதலே விநாயகர் பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்துபூஜை, வாஸ்து ஹோமம், வேதபாராயணம், யாகசாலை ஹோமங்கள், பூர்ணாஹூதி, மஹா தீபாரதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து யாக வேண்டிய பூஜிக்கப்பட்ட புனித நீரை எடுத்துச் சொன்று கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள், கோவில் குடி பாட்டுக்காரர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.