ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேகம்
கரூர் மாவட்டம், வெங்கமேடு, கொங்குநகர், அண்ணா சாலை, இரண்டாவது கிராஸ் பகுதியில் அமர்ந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் யாக வேள்விகள் அமைக்கப்பட்டு சிவாச்சாரியார்கள் யாகம் நடத்தினர். யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை, கோவில் கலசத்திற்கு எடுத்துச் சென்று, புனித நீரை ஊற்றி கோவில் கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக சிவாசாரியார்கள் நடத்தினர்.
கோவில் திருப்பணி கமிட்டி தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், செயலாளர் தங்கராஜ், பொருளாளர் மாசிலாமணி ராணி, துணைப் பொருளாளர் வெங்கடேஷ், பழனியம்மாள் மற்றும் சிறப்பு உறுப்பினர்களும், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் கோவில் சார்பில் வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவரையும் தென்றல் இளைஞர் நற்பணி மன்றத்தினர் வரவேற்றனர்.