சீனிவாசபுரத்தில் விநாயகர் - ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா !

சீனிவாசபுரத்தில் விநாயகர் - ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா !

 மகா கும்பாபிஷேக விழா

சீனிவாசபுரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

சீனிவாசபுரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையம் ஊராட்சியில் உள்ள வாங்கல் சீனிவாசபுரத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவிலில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா இன்று காலை மங்கள இசை உடன் துவங்கியது. தொடர்ந்து கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மூலமந்திர ஹோமம், மாலமந்திர, காயத்ரி மந்திர, ஜெப ஹோமங்கள், விசேஷ சாந்தி, தசாவதார மகாவிஷ்ணு ஹோமம், நாடி சந்தானம் மற்றும் 216 வகையான ஹோம திரவிய ஹோமங்கள், மகா பூர்ணாகுதி மற்றும் தீபாதாரணை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று புனித நீரை கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை சிவாச்சாரியார்கள் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் குப்புச்சிபாளையம், வாங்கல் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story