பரிமள ரங்கநாதர் ஆலயத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி

பரிமள ரங்கநாதர்  ஆலயத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி

புனித நீரால் அபிஷேகம்

மயிலாடுதுறை ஶ்ரீபரிமளரெங்கநாதர் ஆலயத்தில் மண்டலாபிஷேக பூர்த்தி விழாவை முன்னிட்டு 1001 கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு ஹோமம் செய்யப்பட்டு ஶ்ரீ சுகந்தவனநாயகி, ஶ்ரீசுகந்தவனநாதர், ஸ்வாமிக்கு புனிதநீரால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பரிமளரெங்கநாதர் ஆலயம் உள்ளது. பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரெங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்க ஆலயங்களுள் ஐந்தாவது ஆலயமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல்பெற்ற 1,500ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது ஆலயமான இக்கோயிலில் கடந்த ஏப்ரல் 24ம்தேதி ஸம்ப்ரோசணம் என்று அழைக்கப்படும் மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தொடர்ந்து மண்டலாபிஷேகம் நடைபெற்ற வந்த நிலையில் இன்று ஶ்ரீ இராமானுஜர் பக்த கைங்கர்ய ஸபா டிரஸ்ட் சார்பில் மண்டலாபிஷேக பூர்த்திவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஶ்ரீ சுகந்தவனநாயகி, ஶ்ரீசுகந்தவனநாதர், ஸ்வாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டு 1001 கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு ஹோமம், பூரணாகுதி, மகாதீபாரதனை, சுவாமி, தயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பூஜிக்கப்பட்ட 1001 புனித கலசங்களில் உள்ள புனித நீரால் அபிஷேகம் மாலை வரை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு பெருமாள் வீதியுலா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது..


Tags

Next Story