மஞ்ச நாயக்கனூர் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா

மஞ்ச நாயக்கனூர்  மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
தீக்குழியில் இறங்கும் பக்தரகள்
பொள்ளாச்சி அடுத்துள்ள மஞ்ச நாயக்கனூர் மாகாளியம்மன் கோவில் முதலாம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற்றது.

பொள்ளாச்சி அடுத்துள்ள ஜல்லிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சநாயக்கனூர் மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது.. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று வந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான முதலாம் ஆண்டாக குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 30 அடி நீளமுள்ள குண்டத்தில் இறங்கி ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர் மேலும் இந்த குண்டத்தில் சிறுவர்களும் இறங்கி அசத்தினர் மேலும் ஆழியார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வள்ளியம்மாள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்..

இந்த குண்டம் திருவிழாவில் 500.க்கும் மேற்பட்ட மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story