தார் பிளான்ட்டை மூடக்கோரி போராடி கைதானவர்களை மீட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்

தார் பிளான்ட்டை மூடக்கோரி போராடி கைதானவர்களை மீட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர்

போராட்டம்

மயிலாடுதுறை அருகே சீர்காழி எடமணலில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வரும் தார்பிளான்ட்டை மூடக்கோரி நடைபெற்ற மறியல் போராட்டத்தில், 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் தார் பிளாண்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சீர்காழி போலீசார் கைது செய்தனர். கைது செய்தவர்களை விடுவிக்க கோரியும் தார் பிளாண்ட் மூடக்கோரியும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தரையில் அமர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சித் தலைவர் மகாபாரதி போராட்டக்காரர்களை அழைத்து பேசினார்.

உடனடியாக சீர்காழி எடமணலில் கைது செய்யப்பட்ட கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை விடுதலை செய்ய உத்தரவிட்டார் எடமணலில் இயங்கி வரும் தார் பிளான்ட் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார் என்று உறுதி அளித்தார் அதன் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags

Next Story