மாசாணியம்மன் கோவில் காணிக்கை என்னும் பணி

மாசாணியம்மன் கோவில் காணிக்கை என்னும் பணி

மாசாணியம்மன் கோவில் 

ஆனைமலை மாசாணியம்மன் கோவில் காணிக்கை என்னும் பணி துவக்கம்.
ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகும்.இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும்,வெளி மாநிலங்களில் இருந்தும்,வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பக்தர்கள் பணம்,தங்கம் மற்றும் வெள்ளி உலோகங்களையும் நகைகளையும் அங்குள்ள காணிக்கை உண்டியல்களிலும், தட்டுகளிலும் இட்டுச் செல்வர்.ஒவ்வொரு மாதமும் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் நடைபெறும். இந்நிலையில் இம்மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது.பேரூர் பட்டீஸ்வரர் கோயில் துணை கண்காணிப்பாளர் விமலா,ஆனைமலை மாசாணியம்மன் கோயில் துணை கண்காணிப்பாளர் விஜயலட்சுமி,அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் காணிக்கை என்னும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.உண்டியல் காணிக்கை,தட்டு காணிக்கை உள்ளிட்டவைகளை எண்ணி முடித்த பிறகு கணக்கிட்டு, எவ்வளவு காணிக்கை பெறப்பட்டது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Tags

Next Story