மாசாணி அம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி தீவிரம்

மாசாணி அம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி தீவிரம்

காணிக்கை எண்ணும் பணி 

மாசாணி அம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி:ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு பௌர்ணமி,அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இங்குள்ள மாசாணி அம்மனை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் கோவிலில் உண்டியல் காணிக்கை மற்றும்,தட்டு காணிக்கையாகவும் செலுத்துவது வழக்கம்.மேலும் பணம்,நகை,தங்கம்,வெள்ளி போன்ற உலோகங்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்துவர்.மாதத்திற்கு ஒரு முறை அறங்காவலர் குழு உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் உண்டியலில் இருக்கும் காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது மாசாணி அம்மன் கோயிலில் இம்மாதத்திற்கான உண்டியல் காணிக்கை என்னும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Tags

Next Story