தருமபுர ஆதீனத்தை ஆதரிக்கும் ஆறு ஆதீனங்கள்

தருமபுர ஆதீனத்தை ஆதரிக்கும் ஆறு ஆதீனங்கள்

தருமபுரம் ஆதினம்

தருமபுரம் ஆதீன குரு முதல்வர் குருஞான சம்பந்தரின் குருபூஜை விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற மாகேஸ்வர பூஜையில் தருமபுரம் ஆதீனகர்த்தர் மற்றும் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார் கோவில் ஆதீனம் ஆகியோர் பங்கேற்று மதிய விருந்து அருந்தினர்

. மயிலாடுதுறையில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் உள்ளது. இந்த ஆதீனத்தை நிறுவிய குரு முதல்வரான குருஞானசம்பந்தரின் குருபூஜை திருவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக இன்று இரவு தருமபுரம் ஆதீனத்தை அவரது பக்தர்கள் சிவிகை பல்லக்கில் அமர்த்தி தோளில் சுமந்து கொண்டு ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றிவரும் பிரசித்தி பெற்ற பட்டணப்பிரவேசம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முன்னதாக இன்று மதியம் ஆதீன திருமடத்தில் மாகேஸ்வர பூஜை நடத்தப்பட்டது. இதில் தருமபுரம் ஆதின கர்த்தர் மற்றும் மதுரை ஆதீனம், செங்கோல் ஆதீனம், சூரியனார்கோயில் ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள் கலந்து கொண்டு மதிய உணவு அருந்தினர். இதில் துறவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு மதிய உணவு அருந்தினர்.

ஆபாச வீடியோ மிரட்டல் வழக்கில் சிக்கியுள்ள தருமை ஆதீனம் தற்பொழுது பட்டண பிரவேசம் எனப்படும் மனிதனை பல்லக்கில் வைத்து மனிதனே சுமக்கும் செயலை பல்வேறு அமைப்பினர் கண்டித்து வருகின்றனர். அதையும் மீறி இன்று பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ளது.

Tags

Next Story