4 கம்ப்யூட்டர் 2 பிரிண்டர் ரூ.4.50லட்சமா - கவுன்சிலர் ஆவேசம்

4 கம்ப்யூட்டர் 2 பிரிண்டர் ரூ.4.50லட்சமா - கவுன்சிலர் ஆவேசம்
X

 உறுப்பினர் கூட்டம்

மயிலாடுதுறை நகராட்சியில் புதிதாக வாங்கப்படவுள்ள 5 கணிணி, 2 பிரின்டருக்கு 4.50 லட்சம் ரூபாயா செலவு செய்வது, பணிகள் தரமாக செய்யப்படுவதில்லை என்று குற்றம் சாட்டிய திமுக வார்டு உறுப்பினர் ரஜினி வெளிநடப்பு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறைvமாவட்டம் மயிலாடுதுறை நகராட்சி நகர மன்றத்தின் மாதாந்திர உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. நகராட்சி நகர மன்ற தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 36 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வார்டில் உள்ள பிரச்சினைகள் குறித்து விவாதித்தனர். பாதாளசாக்கடை நீர் வீதிகளில் வழிந்தோடும் நிலையில் லட்சக்கணக்கான ரூபாய் செலவீனமாக கணக்கு காட்டப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டது. குடிநீர் மற்றும் பாதாளசாக்கடை திட்ட பணிகள் மற்றும் இணைப்பு வழங்குதல் உட்பட்ட பல்வேறு பணிகளுக்காக 5 கணிணிகள், 2 பிரிண்டர்கள் வாங்க நகராட்சி வருவாய் நிதியில் 4.50 லட்சம் செலவீனமாக ஒப்புதல் கோரப்பட்டது. இதற்கு திமுகவைச் சேர்ந்த 29வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ரஜினி எதிர்ப்பு தெரிவித்தார். என்ன மாடல் கம்யூட்டர் வாங்குறீர்கள், நீஙகள் வாங்கவுள்ள ஐ5 மாடல் கமயூட்டர் 15 வருடத்திற்கு முன்பே வந்தது. 20 ரூபாயில் நான் ஐ5 மாடல் லேப்டாப் வாங்கி தருகிறேன் இதற்குப்போய் இவ்வளவு பெரிய தொகையா ஒதுக்குவது என்று நகராட்சி ஆணையர் சங்கரிடம் கேள்வி எழுப்பினார். ரோடு போட்டு பிச்சுகிட்டு போச்சு நகராட்சி நிதியை வீணடிப்பதாகவும் குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story