மயிலாடுதுறை மாவட்டத்தில் தாளடி,சம்பா விவசாயம் மும்முரம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தாளடி,சம்பா விவசாயம் மும்முரம்

சம்பா சாகுபடி


மயிலாடுதுறை மாவட்டத்தில் குழுவை அறுவடை முடிந்து தாளடி சம்பா விவசாயம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் காவிரி ஆற்றின் கடைமடை பகுதியாகும். இம்மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழில். 1,85,852 ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் பெரும்பாலும் நிலத்தடி நீர் பாசனம் மூலமே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டம் முழுவதும் விவசாயத்திற்கு23,831 இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

94,850 ஏக்கர் குறுவை பயிரிடப்பட்டது. தற்போது தாளடி மற்றும் சம்பா விவசாயம் நிலத்தடி நீர் மூலமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 60%விவசாய நடவு பணிகள் முடிவடைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீர் வரத்து நின்று விட்டதால், நிலத்தடிநீர் மட்டமும் குறைந்துவருகிறது. ஒருசில பகுதிகளில் நேரடி நெல் விதைப்பும் நடைபெற்றுள்ளது.

Tags

Next Story