தொழில் கடன் வழங்குவதில் மயிலாடுதுறை மாவட்டம் முதலிடம்
மயிலாடுதுறை மாவட்டம் முதலிடம்
வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் கடன் உதவி வழங்கும் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தில் முதன்மையான மாவட்டமாகி சாதன படைத்துள்ளது
மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவ மாணவியருக்கான சிறப்பு கல்விக்கடன் வழங்கும் முகாம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னோடி வங்கி அதிகாரி அருன்விக்னேஷ் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி விளக்க உரையாற்றினார். மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையேற்று உரையாற்றும் பொழுது மயிலாடுதுறை மாவட்டத்தில் 2500 மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், நர்சிங் போன்ற கல்லூரி மாணவர்கள் 233 மாணவர்களுக்கு கல்வி கடன் ரூ.6.75 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அளவில் பல்வேறு கடனுதவி வழங்குவதில் நமது மயிலாடுதுறை மாவட்டம் முன்னோடியாக விளங்குகிறது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான தொழில் கடன் உதவி வழங்கும் திட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டம் தமிழகத்தில் முதன்மையான மாவட்டமாகி சாதன படைத்துள்ளது மேலும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், நீட்ஸ் ஆகிய இரண்டு திட்டங்களிலும் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி கடனுதவி வழங்கி மாநிலத்தில் மூன்றாவது மாவட்டமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெற்றோர்கள் தம் பிள்ளைகள் நன்றாக படிப்பதற்கு ஊக்கமளித்து உற்சாகப்படுத்தி ஒரு நாளைக்கு 5 முறையாவது பாராட்டவேண்டும் என்றார்.
Next Story