என்னால் தான் நீ ஜெயித்தாய்- ஆதாரம் வெளியிட்ட காங்கிரஸ்

திமுக, காங்கிரஸ் மோதல்
தமிழ்நாடு அரசு ஞானாம்பிகை அரசு பெண்கள் கல்லூரிக்கு நூலகம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கி இருந்தது.
கல்லூரியில் ரூ. 4.40கோடி மதிப்பீட்டில் நூலக கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது. இதில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் அழைக்கப்பட்டார். ஆளுங்கட்சி சேர்ந்த எம் பி நகர் மன்ற தலைவர் யாரும் அழைக்கப்படவில்லை. விழா நடைபெற்ற இடத்திற்கு வந்த நகர மன்ற தலைவர் குண்டாமணி செல்வராஜ், எப்படி இது போல் எம்பி, நகர்மன்ற தலைவர் இல்லாமல் விழா நடத்தலாம் என்று கேட்டார்.
நீ வெற்றி பெற உனக்காக யார் ஓட்டு கேட்டா, நான் தானே ஓட்டு கேட்டு ஜெயிக்க வைத்தேன் என்று பேசி தனது அதிர்ப்தியை வெளியிட்டார். இது சமூக வலைத்தளங்களிலும் செய்தி ஊடகங்களும் பரபரப்பாகியது. சட்டமன்றத் தேர்தலில் நகர செயலாளர் குண்டாமணி செல்வராஜ் உள்ள வார்டில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜகுமாருக்கு 52 வாக்குகளும் பாமகவிற்கு 233 வாக்குகளும் பெற்ற அதிர்ச்சி லிஸ்ட்டை வெளியிட்டு காங்கிரஸ் கட்சியினர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
