மயிலாடுதுறை : மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரம்

மயிலாடுதுறை : மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி தீவிரம்

பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி பணியாளர்கள் 

மயிலாடுதுறை நகரில் மழை நீர் தேங்காமல் இருக்க சாலையோர வடிகால் தூர்வாரும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை நகர பகுதியில் காந்திஜி சாலை, கச்சேரி சாலை, பட்டமங்கலவீதி, பெரிய கடை வீதி, மகாதானத் தெரு போன்ற பல பகுதிகளில், மழைக்காலங்களில், தண்ணீர் வடியாமல் தேங்குவது வாடிக்கை, தற்பொழுது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், நகரின் மையப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க, சாலை ஓரங்களில் உள்ள, மழைநீர் வடிகால்களை, மயிலாடுதுறை நகராட்சி, இரண்டு தினங்களாகத் துரித கதியில் சுத்தப்படுத்தி வருகிறது.

Tags

Next Story