மயிலாடுதுறை : தீவிர வாகன சோதனை

மயிலாடுதுறை :  தீவிர வாகன சோதனை

வாகன சோதனை 

மயிலாடுதுறையில்தேர்தல் ஆணைய விதிமுறைகளை மீறி யாரேனும் செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்க வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் நடைபெறவுள்ள மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் கட்சிக்கு வாக்கினை பெறுவதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் தீவிர இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டனர். மயிலாடுதுறையில் காவேரி நகர், நகராட்சி அலுவலகம் அருகில், சப்ஜெயில் கார்னர், கண்ணார தெரு சந்திப்பு, விஜயா தியேட்டர், லாகடம் மற்றும் பல இடங்களில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டு நேற்று மாலை முடிவடைந்தது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி யாரேனும் செயல்படுகிறார்களா என்பதை கண்காணிக்க வாகன சோதனை, தங்கும் விடுதிகள் மற்றும் கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story