மாயூரநாதர் முத்து பல்லக்கில் வீதி உலா

மாயூரநாதர் முத்து பல்லக்கில் வீதி உலா

 மாயூரநாதர்,அபயாம்பிகை திருவீதியுலா   

மயிலாடுதுறை மாயூரநாதர் திருக்கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு ஶ்ரீ அபயாம்பிகை உடனாகிய ஶ்ரீ மாயூரநாதர் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் மின்னோளியால் அலங்கரிக்கப்பட்ட முத்துபல்லக்கில் எழுந்தருளி நடைபெற்ற திருவீதியுலாவில் பொதுமக்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ மாயூரநாதர் திருக்கோவில் உள்ளது. ஸ்ரீ அபயாம்பிகை அம்மன் மயில் உருவில் சிவனை பூஜித்து மயிலுரு நீங்கி சிவனுடன் மயூர தாண்டவம் ஆடிய ஆலயம். இவ்வாலயத்தில் வைகாசி விசாக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதனை முன்னிட்டு இரண்டாம் திருநாளான இன்று முத்துபல்லக்கில் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடைபெற்றது. ஶ்ரீமாயூரநாதர் சன்னதி முன்பு ஶ்ரீமாயூரநாதர் ஶ்ரீபார்வதிதேவி அம்மனுக்கு பஞ்சமுக தீபாரதனை, சோடச தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்நது சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கோவில் பிரகாரத்தை வலம் வந்து யாகசாலை பூஜை பூரணாகுதி தீபாரதனை நடைபெற்றது.

பின்னர் மின்னோளியால் அலங்கரிக்கப்பட்ட பிரமாண்ட முத்துபல்லக்கில் ஶ்ரீமாயூரநாதர், ஶ்ரீஅபயாம்பிகை அம்மன் எழுந்தருள செய்யப்பட்டு மகாதீபாரதனை செய்யப்பட்டு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாரதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story