முத்து மாரியம்மன் ஆலய 80 ஆவது ஆண்டு தீமிதி திருவிழா
நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்
மயிலாடுதுறை திருவிழந்தூர் மேல முத்துமாரியம்மன் கோயிலில் நடந்த 80-ஆம் ஆண்டு தீமிதி திருவிழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்
மயிலாடுதுறை திருவிழந்தூர் மேல ஆராயத் தெருவில் பழமை வாய்ந்த மேல முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 80-ஆம் ஆண்டு தீமிதி உற்சவம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு அக்னி நட்சத்திர அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து காவிரி கரையில் இருந்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் வேப்பிலை சுமந்தும், உடலில் அலகு குத்தியும் ஊர்வலமாக கோயிலை அடைந்தனர். கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குளியில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர் இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
Next Story