சீதளாம்பிகை கோவிலில் பால்குட திருவிழா

சீதளாம்பிகை கோவிலில் பால்குட திருவிழா

பால்குட ஊர்வலம் 

குத்தாலம் அருகே அரையபுரம் ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் சித்திரை பால்குட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே அரையபுரம் கிராமத்தில் ஸ்ரீ சீதளாம்பிகை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 27 ஆம் ஆண்டு சித்திரை பெருவிழாவின் ஒரு பகுதியாக கரகம்,காவடி மற்றும் பால்குட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் காவிரி ஆற்றங்கரையில் இருந்து சக்தி கரகம் , பால் குடங்கள், அலகு காவடிகள் எடுத்து மேல வாத்தியங்கள்,வான வேடிக்கைகள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மகா அடிபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அரையபுரம் கிராமவாசிகள்,விழா குழுவினர்,மற்றும் இளைஞர் அணியினர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags

Next Story