மயிலாடுதுறை: நெற்பயிரில் புகையான் தாக்குதல்

மயிலாடுதுறை:  நெற்பயிரில் புகையான் தாக்குதல்

புகையான் தாக்குதலால் சேதமடைந்த நெற்பயிர் 

மயிலாடுதுறை அருகே ஆனந்த தாண்டவபுரத்தில் வயல்களில் உள்ள நெற்பயிரை புகையான் தாக்கியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மூடுபனியாகவும் வானம்மேக மூட்டமாகவும் இருந்துவருகிறது. அதிக பனிப்பொழிவு உள்ள வயல்பகுதியில் புகையான் தாக்குதல் ஏற்பட்டது, விவசாயிகள் முன் எச்சரிக்கையாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர், வயலில் உள்ள தண்ணீரை உடனடியாக வடிய வைத்தல். புகையான் தாக்குதல் அறிகுறி வந்ததும் நெற்பயிரில் உள்ள தண்ணீரை வடிய வைப்பதும் உடனடியாக புகையான் மருந்து தெளித்தும் காப்பாற்றியுள்ளனர். தற்பொழுது அறுவடைக்குத் தயாராக உள்ளநேரம் மயிலாடுதுறையைஅடுத்துள்ள கொற்றவைநல்லூர் பகுதியில் உள்ள அன்பழகன் என்பவரின் வயலில் திடீரென ஏற்பட்ட புகையான் 4 ஏக்கர் நிலத்தில் உள்ள ஏம்டி.54 ரக நெல் சாகுபடியை பாழாக்கிவிட்டது என தெரிவித்துள்ளார். புகையான் மேலும் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைமேற்கொள்ளவேண்டும் என்றார்.

Tags

Next Story