போல் வால்ட் போட்டியில் மயிலாடுதுறை மாணவி சாதனை

போல் வால்ட் போட்டியில் மயிலாடுதுறை மாணவி சாதனை

போல்வால்ட் போட்டி

திருச்சியில்  நடைபெற்ற போல்வால்ட் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த போல்வால்ட் வீராங்கனை பரணிகா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
திருச்சி அண்ணா ஸ்டேடியத்தில் 96-வது தமிழ்நாடு ஸ்டேட் சீனியர் அத்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப்ஸ் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில், போல் வால்ட் பிரிவில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சேத்திரபாலபுரத்தில் வசிக்கும் விவசாயி இளங்கோவன் என்பவரது மகள் தற்போது ரயில்வே துறையில் எழுத்தராக பணியாற்றிவரும் போல் வால்ட் வீராங்கனை பரணிகா 4 மீட்டர் உயரம் தாண்டி, முதல் இடம் பிடித்து, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றார்.

Tags

Next Story