மயிலாடுதுறை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தினர் உண்ணாவிரதம்

மயிலாடுதுறை தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தினர் உண்ணாவிரதம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதம்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலக சங்கத்தினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உண்ணாவிரதம்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மத்திய செயற்குழு கூட்ட முடிவின் அடிப்படையில் வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கையான வருவாய்த்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், பட்டதாரி அல்லாதோரின் பதவி உயர்வை உத்தரவாதப்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி மாநிலம் தழுவிய மாவட்டத் தலைநகர் உண்ணாவிரதப் போராட்டத்தில் அலுவலக உதவியாளர் முதல் வட்டாட்சியர் வரை அனைத்து நிலை அலுவலர்களும் கலந்துகொண்டு உள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்று வரும் போராட்டத்தில் மாவட்ட தலைவர் தென்னரசு தலைமை வகித்தார் கூட்டமைப்பின் பொறுப்பாளர் இளவரசன் மற்றும் முருகானந்தம், கணேசன், பழனி, சிஐடியு ராமானுஜம் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story