மயிலாடுதுறை : வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி

மயிலாடுதுறை : வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி

பயிற்சி கூட்டம் 

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களவை தொகுதியில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மயிலாடுதுறை பாராளுமன்ற தேர்தலில் மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் பணியாற்ற உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான முன்னேற்பாடு கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர் (பொது) கன்ஹராஜ் ஹச் பகதே கலந்துகொண்டார். இக்கூட்டத்தின் போது கூடுதல் ஆட்சியர் பீர் ஆலம், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா உடன் இருந்தனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தேர்தல் பார்வையாளர் (பொது) தெரிவித்ததாவது: மயிலாடுதுறை பாராளுமன்ற பொதுத்தேர்தலை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் தொடர்ந்து பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்தல் பணியை முழுமையாகவும், நிறைவாகவும் செய்ய வேண்டும். வாக்குப்பதிவு தினத்தன்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பகுதிக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களும் 100 சதவீதம் வாக்களிப்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலர் உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

வாக்குச்சாவடியில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக முதல்நிலை அலுவலர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். வாக்குப்பதிவு தினத்திற்கு முன்னதாகவே வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்விளக்கு, கழிவறை வசதிகளை உறுதி செய்து கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும் வாக்காளர்கள் 100 சதவீதம் தவறாது வாக்களிக்க ஏதுவாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தேர்தல் பார்வையாளர் (பொது) தெரிவித்தார். முன்னதாக, 85-வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட தபால் வாக்கு படிவம், பறக்கும் படை அலுவலர்களின் பணிகள், நிலையான கண்காணிப்பு குழுவினரின் பணிகள் தொடர்பாக தேர்தல் பார்வையாளர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Read MoreRead Less
Next Story