படகு மூழ்கியதற்கு அரசு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்த மீனவர்

படகு மூழ்கியதற்கு அரசு கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்த மீனவர்

நிவாரண தொகையை திருப்பி கொடுத்த மீனவர்

தமிழக அரசு வழங்கிய நிவாரண ஆணையை அமைச்சரிடம் திருப்பி கொடுத்த மீனவர்.

மயிலாடுதுறை அருகே பூம்புகார் கடலில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விசைப்படகு மூழ்கிய சேதமானது. அதன் உரிமையாளர் ரமேஷுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவித்திருந்தது. இன்று மயிலாடுதுறையில் தமிழக முதல்வர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்க வரும்பொழுது அந்த நிவாரண வழங்கப்படும் என்று மீன்வளத் துறையினால் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல் ரமேஷ் மயிலாடுதுறையில் நடந்த தமிழ்நாடு முதல்வர் நிகழ்ச்சியில் இவருக்கு நிவாரண தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. அந்த ஆணையைப் பார்த்து அருகில் இருந்த அமைச்சரிடமே திருப்பி கொடுத்தார். இது கண்ட அமைச்சர்கள் சில வினாடிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மீன்வளத்துறை அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அந்த நிவாரண ஆணையை மீண்டும் பெற்றுக்கொள்ள செய்தனர் . இதற்கிடையே அவருக்கு அளித்த நிவாரணம் போதவில்லை என்றும் அதனால் திருப்பி அளித்ததாக கூறப்பட்டது.

இதுகுறித்து மீனவர் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், எனக்கு அளித்த ஆணையில் இருந்த பெயர் தவறாக இருந்தால் திருப்பி அளித்தேன் அது சரி செய்து என்னிடம் அளித்ததால் மீண்டும் வாங்கி சென்றேன் என தெரிவித்தார்.

Tags

Next Story