மாயூரநாதர் கோயில் யானையை மாவட்ட வனத்துறை அலுவலர் ஆய்வு

மாயூரநாதர் கோயில் யானையை மாவட்ட வனத்துறை அலுவலர் ஆய்வு
X

ஆய்வு 

மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக அபயாம்பாள் என்ற பெண் யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தோமர், தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது யானை பராமரிக்கப்படும் இடம், யானைக்கு வழங்கப்படும் உணவுகள், யானை தினசரி முறையாக நடைபயிற்சி கூட்டிச் செல்லப்படுகிறதா? உள்ளிட்ட ,பல்வேறு விபரங்களை கோயில் துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் யானை பாகன் செந்தில் ஆகியோரிடம் அவர்கள் கேட்டறிந்தனர். மேலும் யானை, தற்போது பராமரிக்கப்பட்டு வரும் யானை கொட்டகை இல்லாமல், தனியாக வேறொரு இடத்தில், விஸ்தாரமாக காற்று வசதியுடன் கூடிய ஷெட் அமைக்க, கோயில் நிர்வாகத்தினரிடம் ஆய்வுக் குழுவினர் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல், வனவர் கதாநாயகன், வனவிலங்கு ஆர்வலர் சிவகணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story