மாசாணி அம்மன் கோவிலில் மருத்துவ மையம் - முதல்வர் துவக்கி வைப்பு
மருத்துவ மையம் திறப்பு
பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் மருத்துவ மையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந் நிகழ்வை முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக உள்ளதால் இங்கு உள்ளூர் மட்டுமில்லாமல் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மற்றும் மதுரை மட்டுமல்லாமல் கேரளா ஆந்திரா வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு இந்து சமய அறநிலைத்துறை மூலம் மாசாணி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள கட்டிடத்தை மருத்துவ மையமாக மாற்ற 15 லட்சம் மதிப்பீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.. இந்நிகழ்வில் கோவை மண்டல இணை ஆணையர் ரமேஷ் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி மாசாணி அம்மன் கோவில் அறங்காவல குழு தலைவர் முரளி கிருஷ்ணன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள், திருமுருகன், மஞ்சுளா, தங்கமணி மருதமுத்து,ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்க குமார், ஆனைமலை திமுக நகரச் செயலாளர் டாக்டர் செந்தில்குமார், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் யுவராஜ் மற்றும் மருத்துவர்கள் மருத்துவத்துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.