தேர்தல் நடத்தை விதிமுறைகளால் புகார் மனுக்களை பெட்டியில் செலுத்திய பொதுமக்கள்
புகார் பெட்டியில் புகார் செலுத்திய பொதுமக்கள்
தேர்தல் நடத்தை விதிமுறைகளால் புகார் மனுக்களை பெட்டியில் செலுத்திய பொதுமக்கள். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு செய்ததற்கு பிறகு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெறுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக மனுக்கள் அளிக்கும் பொது மக்களுக்கு, மனுக்களை பெற்றுக் கொண்டதற்கான அத்தாட்சி வழங்கப்படுவது வழக்கம்.
இதனால், கரூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதியில் இருந்து இன்று வழக்கம் போல் மனு அளிக்கலாம் என வந்த பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மாவட்ட நிர்வாகம் சார்பில் இது போன்ற மனுக்களை கொண்டுவரும் பொது மக்களுக்காக ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு "மனுக்கள் செலுத்தும் பெட்டி" என்ற பெயரில் அங்கு மனுக்களை செலுத்த ஏற்பாடு செய்திருந்தனர். இதனால், பொதுமக்கள் வேறு வழியின்றி தாங்கள் கொண்டு வந்த மனுக்களை அந்த பெட்டியில் செலுத்தி விட்டு சென்றனர்.
அப்போது மனு பெற்றதற்கான அத்தாட்சி வழங்கிய போது, உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது, செலுத்திய மனுவுக்கு ரசீது இல்லை என்றால், இதற்கு எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? என புலம்பியவாறு பொதுமக்கள் பெட்டியில் மனுக்களை செலுத்திவிட்டு விரக்தியோடு சென்றனர்.