ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினர் தர்ணா போராட்டம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியக் குழு கூட்டத்தில் உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.

பொள்ளாச்சி அடுத்துள்ள மூலனூர் ஊராட்சியில் தனிநபர் தோட்டத்திற்கு முறைகேடாக தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அமைத்த ஊராட்சி மன்ற தலைவர் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வடக்கு ஒன்றிய குழு கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி..மார்ச்..08 பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு தலைவர் விஜயராணி ரங்கசாமி தலைமையில் நடைபெற்றது.. இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் அப்போது ஒன்றிக்குழு உறுப்பினர் நாகராஜன் மூலனூர் ஊராட்சியில் தனிநபர் தோட்டத்திற்கு தண்ணீர் கொண்டு செல்ல முறைகேடாக குழாயை அமைத்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கிருந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் சமாதானம் அடையவில்லை அங்கு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பொறியாளர் தாமோதரதாஸ் நாகராஜனுடன் நீண்ட நேரம் பேச்சு வார்த்தை நடத்தி குழாயை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார்.. மூலனூர் ஊராட்சியில் தனிநபர் தோட்டத்திற்கு முறைகேடாக தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அமைத்த ஊராட்சி மன்ற தலைவர் ரவியை தட்டிக் கேட்டபோது தன்னையும் தாக்கியதாகவும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் குழாயை அமைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்த நாகராஜ் தற்போது குழாயை அப்புறப்படுத்துவதாக அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு உள்ளேன் தொடர்ந்து நடவடிக்கை இல்லை என்றால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்..

Tags

Next Story