மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தற்கொலை
தற்கொலை
கரூர் மாவட்டம், தாந்தோணி மலை, பாலசுப்ரமணிய சுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தராம்பாள் வயது 47. இவரது மகன் சிலம்பரசன் வயது 29. சிலம்பரசனுக்கு கடந்த 7- வருடங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். ஆயினும், அவருக்கு உடல் நலம் பூரண குணமடையவில்லை. இதனால், விரக்தி அடைந்த மனநிலையோடு வாழ்ந்து வந்த சிலம்பரசன், ஏப்ரல் 22ஆம் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6:30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவரது வீட்டில் தூக்கி ட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலைக்கு சென்ற சுந்தராம்பாள் மாலையில் வீடு திரும்பியபோது, தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும்,இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த சிலம்பரசன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.